கத்தாரில் மருத்துவ ஆணையத் துறையின், புதிய வேலை நேரம்.!

மருத்துவ ஆணையத் துறையின், புதிய வேலை நேரங்களை பொது சுகாதார அமைச்சகம் (MoPH) இன்று (25-03-2020) அறிவித்துள்ளது. அதன்படி, வருகின்ற மார்ச் 29 ஆம் தேதியிலிருந்து, காலை 7:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை ஒரே ஷிப்டில் இருக்கும் என்பதாக கூறியுள்ளது.

மருத்துவ ஆணையத்தின் வேலை நேரத்தை மாற்றுவது, கொரோனா வைரஸிற்கான முன்னெச்சரிக்கை நடைமுறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என்று அமைச்சகம் விளக்கமளித்தது.

மேலும், சேவையை விரைவாக அணுக புதிய வேலை நேரங்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்று MOPH பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தது.