COVID-19; கத்தாரில் இதுவரை 1,00,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.!

கத்தாரில், கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மேலும் இரண்டு பேரின் மரணம், 418 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 884 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் ‌இன்று (13-07-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 1,04,016ஆக உயர்ந்துள்ளது.

மேலும், COVID-19 தொற்றுக்குள்ளான புதிய நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவையைப் பெற்றுள்ளன என்பதாகவும் MoPH தெரிவித்துள்ளது.

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மேலும் இரண்டு பேரின் மரணத்தை பொது சுகாதார அமைச்சகம் இன்று பதிவு செய்துள்ளது. தற்போது வரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 149ஆக உயர்ந்துள்ளது.

கத்தாரில் இன்றைய நிலவரப்படி, கொரோனா வைரஸிலிருந்து மேலும் 884 நோயாளிகள் குணமடைந்துள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வரை குணமடைந்தவர்களின், மொத்த எண்ணிக்கை 1,00,627ஆக உள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 3,645 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் இதுவரை 4,16,327 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.