கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று மேலும் 3 பேர் பலி.!

213 Covid-19 cases reported on Oct 8

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட மேலும் மூன்று பேரின் மரணத்தை பொது சுகாதார அமைச்சகம் இன்று (26-06-2020) பதிவு செய்துள்ளது. கத்தாரில் இதுவரை மொத்தம் 109 பேர் கொரோனா தொற்றுக்கு மரணமடைந்துள்ளனர்.

இன்று பதிவு செய்யப்பட்ட புதிய மூன்று மரணங்களில், இரண்டு பேர் தேவையான மருத்துவ சேவையைப் பெற்றுவந்தவர்கள் என்றும், இறந்தவர்கள் 45, 59 மற்றும் 79 வயதுடையவர்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், பொது சுகாதார அமைச்சகம் இறந்த நோயாளிகளின் குடும்பத்திற்கு தனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளது.