கத்தாரில் Air Doctor விற்பனைக்கு பொது சுகாதார அமைச்சகம் தடை.!

MoPH prohibits sale of 'Air Doctor. Image Source : TPQ

கத்தார் பொது சுகாதார அமைச்சகம் (MoPH) ஏர் டாக்டர் தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டைத் தடுக்க மருந்தகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை இன்று (11.04.2020) விடுத்துள்ளது.

ஏர் டாக்டர் என்னும் மருந்து காற்றின் மூலம் பரவும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாக்கப் பயன்படுகிறது என்ற தவறான மருத்துவ கூற்றுகள் கொண்டிருப்பதால், அதனை தடுக்கும் பொருட்டு MoPH மருந்தகங்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

மேலும், கத்தார் இந்த மருந்திற்கு எந்தவொரு அதிகாரமும் வழங்கவில்லை என்றும்,  தயாரிப்பதற்கான உரிமமும் பெறவில்லை என்றும், பொது சுகாதார அமைச்சகம் (MoPH) தெரிவித்துள்ளது.

Source : TPQ