COVID-19 : கத்தாரில் புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதி; மொத்தம் 500ஐ தாண்டியது..!

MoPH reports 28 new cases, 2 recoveries and first death.

கத்தாரில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 28 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள், குணமடைந்த இரண்டு நோயாளிகள் மற்றும் வைரஸ் காரணமாக ஏற்பட்ட முதல் மரணம் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் (MoPH) நேற்று (28-03-2020) பதிவு செய்துள்ளது.

புதிய சம்பவங்கள்

கத்தாரில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 28 நபர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 590ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இந்த புதிய சம்பவங்கள் கத்தார் திரும்பிய பயணிகளுடன் தொடர்பு கொண்டவை என்றும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தேவையான மருத்துவ சேவையைப் பெற்று வருகின்றனர் என்பதாக கூறியுள்ளது.

குணமடைந்தோர்

கத்தாரில் நேற்றைய நிலவரப்படி, மருத்துவமனையில் இருந்து மேலும் இரண்டு நோயாளிகள் குணமடைந்துள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

தற்போது வரை குணமடைந்தவர்களின், மொத்த எண்ணிக்கை 45ஆக உள்ளது.

சோதனைகள்

கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில், இதுவரை 16,582 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.