கத்தார் நாட்டில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு..!

MoPH reports 58 new confirmed cases of coronavirus in Qatar.

கத்தாரில் 58 புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என பொது சுகாதார அமைச்சகம் (MoPH) அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த எண்ணிக்கை 320ஆக உயர்ந்துள்ளது.

புதிய நோயாளிகளில் 54 பேர் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்றும், முன்னர் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நோயாளிகளில், பெரும்பாலானவர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு, வைக்கப்பட்டவர்கள் எனவும், மற்ற நான்கு நோயாளிகளும் பயண தொடர்புகளுடன் தொடர்பானவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து புதிய நோயாளிகளும் முழுமையான தனிமைப்படுத்தலின் கீழ் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர்கள் அனைவரும் நிலையான சுகாதார நிலையில் உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அனைத்து தொடர்புகளையும் கண்டறிய கொரோனா வைரஸ் பரிசோதனையை அமைச்சகம் விரிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை சமாளிப்பதற்கான மிக உயர்ந்த அளவிலான கண்காணிப்பு, கண்டறிதல் மற்றும் மேலாண்மை நடைமுறைகளை நாட்டில் சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.