கத்தாரில் கொரோனா வைரஸ் பாதிப்பு 15 ஆக உயர்வு..!

கத்தார் நாட்டில் வெளிநாட்டை சேர்ந்த மூன்று புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் (COVID-19) வழக்குகளை பொது சுகாதார அமைச்சகம் (MOPH) அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

மூன்று புதிய வழக்குகள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு, தொற்று நோய் மையத்தில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் மேலும், அவர்களுடன் வசிப்பிடத்தைப் பகிர்ந்து கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் கூடுதலாக, அவர்களுடன் தொடர்பு கொண்ட அனைவரும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக MoPH அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளது என்று பொது சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.