கத்தார் அல் கோரில் இயற்கை ரிசர்வ் மற்றும் கடற்கரை பூங்கா மீண்டும் திறப்பு..!

Nature-reserve-and-beach-park-reopen-in-Al-Khor
Image Credits: Projects Qatar

கத்தாரில் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்குவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அல் கோர் (Al Khor) பகுதியில் உள்ள Al Qamra கடற்கரை பூங்கா மற்றும் Al Shuaa இயற்கை ரிசர்வ் (Reserve) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கத்தார் அல் கோரில் உள்ள Al Qamra பூங்கா 10,500 சதுரமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த பூங்காவில் பல வகையான விவசாய கூறுகள் மற்றும் பலவிதமான நிழல் தரும் மரங்கள் உள்ளன.

Image Credits: Projects Qatar

Al Shuaa இயற்கை ரிசர்வ் 13,000 சதுரமீட்டர் பரப்பளவில் பச்சை புல்வெளிகளைக் கொண்டுள்ளது.

இங்கு அரேபிய ஓரிக்ஸ் மற்றும் மான் போன்ற 62 வகையான விலங்குகள் மற்றும் பலவகையான மரங்களை காண முடியும். மேலும், காடைகள், நெருப்புக் கோழிகள் மற்றும் புறாக்கள் போன்ற பறவைகளையும் இங்கு காணலாம்.

இதையும் படிங்க: கத்தாரில் இன்று ‌(செப் 23) மேலும் ஒருவர் பலி; புதிதாக 258 பேர் பாதிப்பு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…