கத்தார் தோஹா மெட்ரோ காகித டிக்கெட்டுகளுக்கான விலை உயர்வு..!

New pricing for Doha Metro paper tickets.

கத்தார் தோஹா மெட்ரோ அதன் காகித டிக்கெட்டுகளுக்கான (Paper Ticket) விலைகளை உயர்த்தியுள்ளது.

காகித டிக்கெட்டுகளின் பயன்பாட்டினால் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்காக, தோஹா மெட்ரோ, ஸ்டாண்டர்ட் மற்றும் கோல்ட் கிளாஸ் (Standard And Gold Class) ஆகிய இரண்டின் காகித டிக்கெட்டுகளின் திருத்தப்பட்ட விலையை அறிவித்துள்ளது. இருப்பினும், ஸ்டாண்டர்ட் மற்றும் கோல்ட் கிளப் டிராவல் கார்டுகளின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

காகித டிக்கெட்டுகளுக்கான பழைய விலைப்படி, ஸ்டாண்டர்ட் கிளாஸ் (Standard Class) ஒற்றை பயணத்திற்கு QAR 2 ரியாலாகவும், ஒரு நாள் பாஸுக்கு QAR 6 ரியாலாகவும் மற்றும் கோல்ட் கிளாஸ் (Gold Class) ஒற்றை பயணத்திற்கு QAR 10‌ ரியால் ஆகவும் ஒரு நாள் பாஸுக்கு QAR 30 ரியால் ஆகவும் இருந்துவந்தது.

காகித டிக்கெட்டுகளுக்கான திருத்தப்பட்ட விலையில், ஸ்டாண்டர்ட் கிளாஸ் ஒற்றை பயணத்திற்கு QAR 3 ரியால்கள், ஒரு நாள் பாஸுக்கு QAR 9 ரியால்களாகவும் மேலும், கோல்ட் கிளாஸ் ஒற்றை பயணத்திற்கு QAR 15 ரியால், ஒரு நாள் பாஸுக்கு QAR 45 ரியால் ஆகவும் உயர்ந்துள்ளது. திருத்தப்பட்ட விலையானது, இன்று (21-02-2020) முதல் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த, பயண அட்டைகள் அனைத்து தோஹா மெட்ரோ நிலையங்களிலும் உரிமம் பெற்ற சில்லறை விற்பனையாளர்களிடமும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.