கத்தாரில் ஈத் அல் பித்ர் தொழுகை ஒரு பள்ளியை தவிர, மற்ற பள்ளிவாசல்களில் நடைபெறாது.!

Image Credits: Shutterstock.com

கத்தாரில் இந்த முறை ஒரே ஒரு பள்ளியை தவிர மற்ற பள்ளிவாசல்களில் ஈத் அல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெறாது என Awqaf அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கத்தாரிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ஐவேளைத் தொழுகை மற்றும் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், நோன்புப் பெருநாள் தொழுகையானது இமாம் முஹம்மத் பின் அப்துல் அல்-வஹாப் (Imam Muhammad ibn Abd al-Wahhab) பள்ளிவாசலில் 40 நபர்களுடன் நடைபெறும் என்பதாக Awqaf மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகம்  அறிவித்துள்ளது.

இந்த 40 பேரில், இமாம், முஅத்தின் (பாங்கு சொல்பவர்) மற்றும் பள்ளிவாசலின் ஊழியர்கள் அடங்குவார்கள் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொற்று நோய் அடங்கியவுடன், அனைத்து பள்ளிவாசல்களும் மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

Source: TPQ