கத்தாரில், ஹைப்பர் மார்க்கெட்களில் நுழைவதற்கு Ehteraz App-இல் பச்சை நிறக் குறியீடு கட்டாயம்.!

Image Credits: IloveQatar.net

வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் Ehteraz பயன்பாட்டைக் நிறுவ வேண்டும் என்பதோடு, பச்சை நிறக் (ஆரோக்கியமானவர்கள்) குறியீட்டைக் கொண்டவர்கள் மட்டுமே அதன் கிளைகளுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என Al Meera Consumer Goods Co அறிவித்துள்ளது.

இந்த நடைமுறையானது, கத்தாரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு அங்கமாக பின்பற்றப்படுவதாக அல் மீரா தெரிவித்துள்ளது.

மேலும், Monoprix Qatar இது போன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், அரசாங்க வழிகாட்டுதலின் படி, அனைத்து வாடிக்கையாளர்களும் கடையில் நுழைவதற்கு முன்பு தங்கள் Ehteraz App-இல் பச்சை நிறக் குறியீட்டை காண்பிப்பது கட்டாயமாகும். இது அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் Monoprix கத்தார் அணியின் பாதுகாப்பிற்காக வலியுறுத்தப்படுகிறது எனக் கூறியுள்ளது.

For the safety of all #customers & #team ,As per government guidance, it is mandatory for all customers to show their EHTERAZ green tag before entering the store.#MonoprixKeepsYouSafe

Posted by Monoprix Qatar on Tuesday, June 2, 2020

Source : QatarDay.com