கத்தாரில் அத்தியாவசியமற்ற கடைகளை இன்று முதல் மூட உத்தரவு.!

Non-essential shops, services to be shut from Friday. Image Source : The Peninsula Qatar.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும், கூட்டங்களைக் குறைப்பதற்கான நாட்டின் முயற்சிகளுக்கு இணங்க, இன்று முதல் (27-03-2020) முதல் கீழ்க்கண்ட அத்தியாவசியமற்ற வணிக நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக,
கத்தார் அனர்த்த நிலைமை மேலாண்மைக் குழுவின் செய்தித் தொடர்பாளர் (Lolwah bint Rashid bin Mohammed al Khater) செய்தியாளர் சந்திப்பில்‌ கூறியுள்ளார்.

அதன்படி, அனைத்து காஃபி ஷாப் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் (ஜூஸ் மற்றும் டீ ஸ்டால்கள்), கல்வி ஆதரவு மையங்கள், கலைகள் மற்றும் நாடக மையங்கள், பொழுதுபோக்கு சேவைகள், திருமண நிகழ்ச்சி நிலையங்கள், காலணிகள் மற்றும் கடிகார கடைகள் போன்றவைகள் அடங்கும் என்பதாக கூறப்பட்டுள்ளது.

மேற்கண்டவற்றை தவிர்த்து, பிற வணிகங்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்படும் என்பதாகவும் மேலும், உணவுப் பொருட்கள் கடைகள், மருந்தகங்கள் மற்றும் உணவகங்களிலிருந்து விநியோக சேவைகள் உள்ளிட்ட கடைகள் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.