கத்தாரில் அக்டோபர் மாதம் வானிலை இனிமையாக இருக்கும்; வெப்பநிலை படிப்படியாக குறையும் – QMD ட்வீட்.!

October will be more pleasant; QMD Tweet
Pic: Qatar Weather

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) இந்த வார இறுதிக்கான அதன் வானிலை முன்னறிவிப்பில், முதலில் மங்கலான வானிலை நிலவும் என்றும், அதைத்தொடர்ந்து பகல்நேரத்தில் வெப்பமாக இருக்கும் என்றும், இரவில் ஈரப்பதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.

கடந்த மாதங்களை விட இந்த மாதம் இனிமையாக மாறும் எனவும், இந்த மாதத்தில் வெப்பநிலை படிப்படியாக குறையும் எனவும் வானிலை ஆய்வுத்துறை கூறியுள்ளது.

இதையும் படிங்க: கத்தாரின் வடக்கு பகுதிகளில் பலத்த மழையுடன் ஆலங்கட்டிகள் விழுந்தன.! (காணொளி)

மேலும், கத்தாரில் நாளை (03-10-2020) சனிக்கிழமை, பிற்பகலில் சில இடங்களில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக QMD தெரிவித்துள்ளது.

கத்தாரில் இன்று மற்றும் நாளை குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறையே 31 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த மாதத்தில், வெப்பநிலை தொடர்ந்து படிப்படியாக குறைந்து கொண்டிருக்கும், கடந்த மாதங்களுடன் ஒப்பிடும்போது, அக்டோபர் மாதத்தின் வானிலை மிகவும் இனிமையாக இருக்கும் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கத்தார் MOPH குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் புதுப்பிப்பு பட்டியல் வெளியீடு.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…