கத்தாருக்குள் கடத்த முயன்ற 6,868 தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் பறிமுதல்.!

Officials thwart attempt
Pic: @qatarcustoms

கத்தார் நாட்டிற்குள் தடைசெய்யப்பட்ட மாத்திரைகள் கடத்தும் முயற்சியை ஏர் கார்கோ மற்றும் தனியார் விமான நிலைய சுங்கத்துறை முறியடித்தது.

இதுகுறித்து கத்தார் சுங்கம் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், கத்தார் நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 6,868 Lyrica மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்துதல் குறித்த கத்தார் இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு.!

ஊழியர் ஒருவரின் பார்சலில் அதிகாரிகள் சந்தேகமடைந்தை அடுத்து, அந்த பார்சலில் உள்ள பெண்கள் ஆடைகளுக்குள் இருக்கமாக கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்த Lyrica மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கம் கூறியுள்ளது.

சட்டவிரோதமான பொருட்களை நாட்டிற்கு கொண்டு செல்வதற்கு எதிராக அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், சுங்க அதிகாரிகள் சமீபத்திய சாதனங்களைக் கொண்டு செயல்படுகிறார் என்றும், கடத்தல்களை சமாளிக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரின் இந்த பகுதியில் புதிய பெட்ரோல் நிலையம் திறப்பு.!