கத்தாரில் செனயா பகுதி வீதிகள் நாளை ஒரளவில் திறக்கப்படும்.!

கத்தார் நெருக்கடி மேலாண்மைக்கான உச்சக் குழுவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் லோல்வா பின்த் ரஷீத் அல்-காதர் (Lolwah bint Rashid Al-Khater) நேற்று (20-04-2020) ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ள முக்கியமான அறிக்கைகள்‌ :

  • கத்தார் செனயாவில் அல் வகாலத் வீதி உட்பட செனயா 1 மற்றும் 2 வீதிகள் நாளை (22-04-2020) ஒரளவில் திறக்கப்படும்.
  • செனயா பகுதியின் மூடிய பகுதியிலிருந்து 6,500 தொழிலாளர்கள் சுகாதார தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் தொற்றுநோயிலிருந்து விடுபடுவதை உறுதி செய்ய தேவையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • செனயாவில் மூடப்பட்ட பகுதிகளிலுள்ள தொழிலாளர்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதோடு, கூடுதலாக உணவுப்பொருட்கள் மற்றும் தயாரிப்புகளின் விநியோகம் தொடர்ந்து நடைபெறும்.
  • வைரஸ் பரவலின் உச்ச நிலையை அடைந்துள்ளதால் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
  • இத்தகைய நடைமுறைகள் அனைவரும் பின்பற்றுவதை, குறிப்பாக சமூக இடைவெளியை பின்பற்றுவதை காவல்துறை தொடர்ந்து கண்காணிக்கும்.
  • வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களிடமிருந்து மார்ச் மாதத்தில் அதிகமான கொரோனா வைரஸ் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் பதிவான நோய்த்தொற்றுகளில் பெரும்பாலானவை தனிமைப்படுத்தப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்டவையாகும்.
  • பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் நோய்த்தொற்றுகள் லேசானவை மற்றும் 1 சதவீதம் மட்டுமே தீவிரமானவை. சோதனைகளின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்ததால் தொற்றுக்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது.
  • கத்தாரில், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலான தொற்றுநோய்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் இருந்து வந்தவை மட்டுமே தனிமைப்படுத்தலுக்கு வெளியில் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல.
  • புனித ரமலான் மாதத்தில் குடும்பக் கூட்டங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • கத்தாரில் இறப்பு விகிதம் உலக நாடுகளை விடவும், அரபு நாடுகளை விடவும் மிக குறைவாகும்.
  • கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை நிர்வகிப்பதற்கும், இன்னும் அதிகரித்தால் அதனையும் நிர்வகிப்பதற்கும் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது.

Source : Qatar Update