கத்தாரில் கொரோனா பரவலை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.!

கத்தார் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான முதல் நபரை பொது சுகாதார துறை அமைச்சகம் நேற்று (29-02-2020) வெளியிட்டது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் நோய் கட்டுப்பாட்டு மையத்தில் (CDC) அனுமதிக்கப்பட்டு, நிலையான நிலையில் உள்ளதாகவும் அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கத்தார் ஹமத் மருத்துவ நிறுவனம் பாதுகாத்து கொள்வது பற்றிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.

மேலும், நோய்களைத் தடுப்பதற்கான உதவிக் குறிப்புகளை பற்றிய காணொளி பதிவை ஒன்றையும் கத்தார் பொது சுகாதார அமைச்சகம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Dr. Jameela Al Ajmi, Executive Director of Corporate Infection Prevention & Control at Hamad Medical Corporation provides tips for preventing infectious diseases#Qatar

Posted by ‎وزارة الصحة العامة – Ministry of Public Health‎ on Wednesday, February 26, 2020