கத்தார் ஏர்வேஸ் 100 வழித்தடங்களில் விமான சேவைகளை விரிவுபடுத்துகிறது.!

Qatar Airways expands network
Pic: Qatar airways

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் புக்கரெஸ்ட் வழியாக சோபியாவுக்கு (Sofia via Bucharest) மீண்டும் தனது சேவைகளை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

உலகளாவிய வலையமைப்பில் மீண்டும் சேர்க்க உள்ள 100வது இலக்கை இது குறிக்கிறது.

அக்டோபர் 16, 2020 முதல் சோபியாவுக்கு மூன்று வாராந்திர விமானங்கள் இயக்கப்படும் என்றும், ஆறு கண்டங்களில் 700க்கும் மேற்பட்ட வாராந்திர விமானங்களுக்கு விமானத்தின் நெட்வொர்க் விரிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விசிட்டிங் விசாவில் அமீரகம் வந்த 50-க்கும் மேற்ப்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் சிக்கித் தவிப்பு.!

கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி HE அக்பர் அல் பேக்கர் அவர்கள் கூறுகையில்,  2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் எங்கள் விரிவுப்படுத்தும் திட்டத்தின் கீழ் 125க்கும் மேற்பட்ட இடங்களுக்கு உயர்ந்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாகவும் மற்றும் நம்பகத்தன்மையுடனும் பயணிக்க விரும்புவார்கள் என்று தெரிவித்தார்.

கொரோனா தொற்றுநோய் தொடங்கியலிருந்து கத்தார் ஏர்வேஸ் 175 மில்லியன் கிலோ மீட்டார் மேல் பறந்து சுமார் 37,000க்கும் மேற்பட்ட விமானங்களில், 2.3 மில்லியன் பயணிகளை தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளது என்றார். மேலும், 400க்கும் மேற்பட்ட charter விமானங்களும் இயக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: கத்தார் தூதரகம் ருமேனியா நாட்டிற்கு மருத்துவ உதவிகள் வழங்கல்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…