சவுதியில் உள்ள முக்கிய நகரங்களுக்கு விமான சேவைகளை தொடங்கியது கத்தார் ஏர்வேஸ்.!

Qatar airways flights Saudi
Pic: @qatarairways

சவுதி அரேபியாவில் உள்ள நகரங்களுக்கு விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 11, 2021 திங்கள் முதல் ரியாத்துக்கான விமான சேவைகள் தொடங்கப்படும் என்றும், அதைத் தொடர்ந்து ஜனவரி 14 வியாழக்கிழமை ஜித்தாவிற்கும், ஜனவரி 16 சனிக்கிழமையன்று தம்மாமுக்கும் (Dammam) சேவைகளை தொடங்கும் என அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட கத்தார் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர்.!

கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் சவுதி அரேபியாவின் ரியாத், தமாம் நகரங்களுக்கு தினசரி சேவைகளை வழங்கும் என்றும், ஜித்தாவிற்கு வாரத்திற்கு நான்கு விமானங்களை இயக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவுக்கு அனைத்து கத்தார் ஏர்வேஸ் விமானங்களும் இயக்கப்படும் என்றும், Boeing 777-300, Boeing 787-8 மற்றும் Airbus A350 விமானங்கள் பிரத்தியேகமாக இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள எங்கள் வர்த்தக மற்றும் சரக்கு பங்காளிகளுடனும், நாட்டின் முக்கிய விமான நிலையங்களுடனும் மீண்டும் ஒரு வலுவான உறவைத் தொடங்க நாங்கள் எதிர்நோக்குகிறோம் என கத்தார் ஏர்வேஸ் ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

சவுதி, கத்தார் இடையே நேரடி விமானங்கள்; முன்பதிவை தொடங்கியது சவுதி ஏர்லைன்ஸ்.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…