கத்தார் ஏர்வேஸ் விமானம் தொடர்ந்து இயங்கும்.!

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் (COVID-19) தற்போது உலகிலுள்ள 199 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகள் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தலை அமல்படுத்தியுள்ளன. மேலும், இந்த வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எல்லை மூடப்பட்டதை தொடர்ந்து, பெரும்பாலான விமான நிறுவனங்களும் மூடப்பட்டது.

ஆனால், கத்தார் அரசுக்கு சொந்தமான கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வரும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், பல நாடுகள் தங்கள் எல்லைகளை மூடுவதைக் கண்டு, தொற்றுநோயால் சிக்கித் தவிக்கும் பயணிகளை அவர்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்கிறது.

இந்நிலையில், மார்ச் 29 முதல் ஏப்ரல் 11 வரை 1,800 விமானங்களை இயக்க விமான நிறுவனம் தற்போது திட்டமிட்டுள்ளது. பெரும்பாலான விமானங்களில் 50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாகவே பயணிகள் பயணம் மேற்கொள்கின்றன என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Dina Seithigal