சீனாவிற்கு மருந்துவ உதவி பொருட்களை வழங்கிய கத்தார் ஏர்வேஸ்.!

Qatar Airways freighters depart for China with coronavirus medical relief.

கத்தார் நாட்டின் தேசிய விமான சேவையான கத்தார் ஏர்வேஸ் தனது ஐந்து விமானங்கள் மூலம் மருந்துப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சீனாவிற்கு சென்றுள்ளது.

கத்தார் ஏர்வேஸ் தனது 5 சரக்கு விமானங்கள் (Cargo freighters) மூலம் சுமார் 300 டன்கள் அளவிலான பொருட்களை ஏற்றிக்கொண்டு, சீனாவின் பீஜிங், ஷாங்காய் மற்றும் குவாங்ஷூ நகரங்களுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்து பொருட்களில், 2,500,000 முக கவசம் (Face Masks) மற்றும் 5,00,000 கை சானிடிசர் பாட்டில்கள் (Hand sanitiser Bottles) அடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

Five Qatar Airways Cargo freighters departed one after the other bound for Beijing, Shanghai and Guangzhou to support…

Posted by Qatar Airways on Saturday, February 22, 2020