கத்தார் ஏர்வேஸின் இலவச விமான டிக்கெட்; உலகம் முழுவதுமிலிருந்து பெரும் வரவேற்பு.!

Qatar Airways offer evokes huge response from teachers
Pic: Twitter/Qatar airways

கத்தார் நாட்டின் விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, இலவச இருவழிப் பயண விமான டிக்கெட்டுகளை வழங்கியுள்ளது.

இந்த சவால் மிக்க சூழலில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் வகையில், அத்தகைய 21,000 இலவச விமான டிக்கெட்டுகளை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: இலவசமாக 21,000 இருவழி விமான டிக்கெட்டுகளை வழங்கும் கத்தார் ஏர்வேஸ்.!

ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கத்தார் ஏர்வேஸ் வழங்கியுள்ள இந்த இலவச டிக்கெட்டுகளுக்கு, உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கத்தார் ஏர்வேஸ் வழங்கிய இந்த சலுகை நேற்று முன்தினத்துடன் (அக்.08) முடிவடைந்த நிலையில், கத்தாரின் தேசிய கேரியர் 21,000 ரிட்டன் டிக்கெட்டுகளை ஆசிரியர்களுக்கு வழங்கியதாக கூறியுள்ளது.

மேலும், கடந்த மூன்று நாட்களில், உலகெங்கிலும் உள்ள ஆசிரியர்களுக்கு எங்கள் பாராட்டின் அடையாளமாக 21,000 ரிட்டன் டிக்கெட்டுகளை வழங்கினோம். வெற்றிகரமாக பதிவு செய்தவர்கள் வாழ்நாளில் தகுதியான பயணத்தை அனுபவிப்பார்கள் என்று நம்புகிறோம் என கத்தார் ஏர்வேஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: குவைத்தின் புதிய பட்டத்து இளவரசர் தேர்வு; கத்தார் அமீர் உள்ளிட்டோர் வாழ்த்து.!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…