COVID-19 : கத்தாரில் புதிதாக 59 பேருக்கு தொற்று உறுதி; மூன்று நோயாளிகள் குணம்.!

Qatar announces 3 new recovered cases, 59 new confirmed cases of COVID-19.

கத்தாரில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 59 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள், குணமடைந்த மூன்று நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார (MoPH) அமைச்சகம் ‌இன்று (30-03-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 693ஆக உயர்ந்துள்ளது.

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்கள், வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக, யுனைடெட் கிங்டமில் இருந்து கத்தாருக்குள் திரும்பிய நபர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்றும், மற்றவர்கள் COVID-19 நோயால் கண்டறியப்பட்ட நபர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக தொற்றுக்குள்ளான நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவையைப் பெற்றுள்ளன என்பதாக தெரிவித்துள்ளது.

குணமடைந்தோர்

கத்தாரில் இன்றைய நிலவரப்படி, மருத்துவமனையில் இருந்து மேலும் மூன்று நோயாளிகள் குணமடைந்துள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

தற்போது வரை குணமடைந்தவர்களின், மொத்த எண்ணிக்கை 51ஆக உள்ளது.

சோதனைகள்

கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில், இதுவரை 20,058 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர் என்று பொது சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸை பரிசோதிப்பதற்கான, புதிய ஆய்வக நுட்பங்களை அமைச்சகம் நியமித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையிலான சோதனைகளை நடத்த முடியும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.