கொரோனா அப்டேட் (ஏப்ரல் 29): கத்தாரில் புதிதாக 643 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு.!

Corona update Qatar Feb27
Pic: iloveqatar.net

கத்தாரில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 643 புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் குணமடைந்த 109 நோயாளிகள் ஆகியவற்றை பொது சுகாதார அமைச்சகம் ‌இன்று (29-04-2020) பதிவு செய்துள்ளது.

இதுவரை கத்தாரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 12,564ஆக உயர்ந்துள்ளது.

மேலும், COVID-19 தொற்றுக்குள்ளான புதிய நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ சேவையைப் பெற்றுள்ளன என்பதாகவும் MoPH தெரிவித்துள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில், 2,808 பேருக்கு ஆய்வக சோதனைகளை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும், கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில், இதுவரை 91,415 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளதாக MoPH தெரிவித்துள்ளது.

Image Source : MoPH

கத்தாரில் வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்காக சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்புடனும், அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

பொது சுகாதார அமைச்சகம் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்கிறது. அவசியமான சந்தர்ப்பங்களில் தவிர வெளியே செல்ல வேண்டாம் என்றும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும், பணியிடங்கள் மற்றும் பொது இடங்கள் உட்பட உடல் ரீதியான தூரத்தை பராமரிக்கவும், முகக்கவசங்களைப் பயன்படுத்தும்படியும் மற்றும் வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அபாயத்தைக் குறைக்க சமூக வருகைகளைத் தவிர்க்கும் மாறும் அமைச்சகம் மக்களை நினைவூட்டியுள்ளது.