கத்தாரில் ரமலான் மாதத்தில், அரசு மற்றும் தனியார் துறைக்கான வேலை நேரம் அறிவிப்பு.!

Qatar announces working hours for govt, private sector during Ramadan.

புனித ரமலான் மாதம் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் துறைகளுக்கான உத்தியோகபூர்வ வேலை நேரத்தை கத்தார் நேற்று (22-04-2020) அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, அரசு துறை ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் காலை 9 மணி முதல் மதியம் 1.00 வரை என்றும், தனியார் துறை ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 வரை என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவைப் பயன்படுத்துவதில் இருந்து, விநியோக சேவைகளை செய்யும் உணவகங்கள், மருந்தகங்கள், உணவுப்பொருட்களின் கடைகள் விலக்கப்பட்டுள்ளது என்றும், வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, இந்த முடிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட பிற தேவையான நடவடிக்கைகளை தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.