கத்தார் தொண்டு Al Furjan மற்றும் Al Mazroua சந்தைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு சுகாதாரப் பொருட்கள் விநியோகம்.!

Image Credits : ilq.net

கொரோனா வைரஸ் (COVID-19) பரவலை எதிர்த்துப் போராடுவதற்காக கத்தார் தொண்டு (Qatar Charity) தன் முயற்சியின் தொடர்ச்சியாக, நாட்டில் உள்ள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பொருட்களை (protective supplies and awareness materials) தொடர்ந்து விநியோகித்து வருகிறது.

கத்தார் நிர்வாக அபிவிருத்தி, தொழிலாளர், சமூக விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் பொது சுகாதார அமைச்சகம் மற்றும் கத்தார் அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன், கத்தார் தொண்டு அல் ஃபுர்ஜன் (Al Furjan) சந்தைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு, சுகாதார பொருட்கள் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளது.

மேலும், இது காய்கறி சந்தைகளில் உள்ள 3,000 தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் வகையில், கத்தார் தொண்டு மற்றும் ஆசிய சமூகங்களை சேர்ந்த தன்னார்வலர்களின் பங்களிப்புடனும் மற்றும் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒத்துழைப்புடனும், விநியோகம் செய்யதுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Source: ilq.net