கத்தார் தொண்டு 7,000-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை மக்களுக்கு விநியோகம்..!

Qatar Charity distributes over 7000 food parcels. Image Source : ilq.net

கத்தார் தொண்டு, கொரோனா வைரஸ் (COVID-19) பரவலைத் தடுப்பதற்காக மக்களுக்கு உணவு மற்றும் தடுப்புப் பொருட்களை வழங்குவதில் அதன் முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறது. மேலும், கத்தார் மாநிலத்தில் வசிக்கும் சமூகங்களுக்கு உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க பல தூதரகங்களும் ஒத்துழைத்து வருகிறது.

சுமார் 20 தூதரகங்களைத் தொடர்பு கொண்ட பின்னர், பல்வேறு ஆசிய, அரபு மற்றும் ஆப்பிரிக்க சமூகங்களைச் சேர்ந்த சுமார் 28 ஆயிரம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில், 7,000 உணவுப் பொட்டலங்களை கத்தார் தொண்டு விநியோகித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கத்தார் தொண்டு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன், விழிப்புணர்வு மற்றும் வைரஸ் பரவுவதைக் குறைப்பதற்கான தடுப்பு முயற்சிகளை ஆதரித்து வருவதாக கூறியுள்ளது.

மேலும், கத்தார் தொண்டு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பிரச்சாரத்தை செயல்படுத்துவதற்கும், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் பொது சுகாதார அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்பு மற்றும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

Source : ilq.net