கொரோனா‌ வைரஸ்; சீனாவிற்கு மருந்து பொருட்கள் வழங்கிய கத்தார்..!

Qatar country send medical supplies to china.

சீனாவில் வூஹான் கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், கத்தார் நாடு சீனாவிற்கு மருந்துவ உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளதாக கத்தாருக்கான சீன தூதுவர் Zhou Jian அவர்கள் தெரிவித்துள்ளார்.

கத்தார் நாடு சீனாவிற்கு அனுப்பிய உதவிப் பொருட்களில் முகமூடிகள், கையுறைகள் உட்பட மருந்துப் பொருட்கள் உள்ளடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கத்தார் நாடும் சீனாவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளதாகவும் அவர்களின் ஆரோயக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கத்தார் அக்கரையுடன் செயல்படுவாதகவும் அவர் தெரிவித்தார்.