கத்தாரில் அரசு துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் சம்பளம் குறைப்பு.!

கத்தாரில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டில் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் சம்பளத் தொகையை குறைக்க முடிவு செய்துள்ளதாக கத்தார் நாட்டு  அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கத்தார் நாட்டின் நிதியமைச்சகம் அந்நாட்டில் உள்ள அரசு சார்ந்த துறைகள், கல்வி நிலையங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கிய உத்தரவில் கத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் மாத வருமானத்தை 30 சதவீதம் குறைக்க முடிவெடுத்துள்ளதாகவும், இந்த முடிவானது ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு
உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்கவோ அல்லது இரண்டு மாத நோட்டீஸ் உடன் தொழிலார்களை இடைநீக்கமோ செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கத்தாரில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் தொகுத்து வழங்க இருப்பதை முன்னிட்டு, அந்நாட்டிற்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் 10 மில்லியன் டாலர் கடன் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், கத்தாரில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார தாக்கமே அரசு இத்தகைய முடிவெடுக்க காரணம் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வெளிநாட்டினருக்கான வேலைகள் மற்றும் சம்பளங்களைக் குறைப்பதனால் நாட்டில் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் நுகர்வோர் செலவினங்களில் ஏற்படும் பாதிப்பு போன்றவை கத்தாரின் பொருளாதார வளர்ச்சியை பெரிதளவு பாதிக்கும் எனவும் கூறப்படுகின்றது.

Source: Khaleej tamil