கத்தார் அனுப்பிய இரண்டு கள மருத்துவமனைகள் இத்தாலிக்கு வந்தடைந்தது.!

கத்தார் அமீர் H H ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் உத்தரவின் பேரில், கத்தார் அமிரி விமானப்படை தனது இரண்டு இராணுவ விமானங்கள் மூலம் இரண்டு கள மருத்துவமனைகளை அமைப்பதற்கான பொருட்களை ஏற்றிக்கொண்டு, நேற்று (08-04-2020) இத்தாலிய குடியரசிற்கு வந்தடைந்தது.

இந்த இரண்டு விமானங்களும் தலைநகரான ரோம் அருகே உள்ள ப்ராடிகா டி மரே இராணுவ விமான நிலையத்தில் தரையிறங்கின.

கத்தார் அனுப்பிய, முதல் கள மருத்துவமனையின் பரப்பளவு சுமார் 5,200 சதுர மீட்டர், மற்றும் இரண்டாவது மருத்துவமனையின் பரப்பளவு சுமார் 4,000 சதுர மீட்டர், மேலும் இரண்டு மருத்துவமனைகளும் 1,000 படுக்கைகள் கொண்டடாக இருக்கும். மேலும், இந்த மருத்துவமனைகளில் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் கொரோனா வைரஸ் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான உபகரணங்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், பிரதிகா டி மரே இராணுவ விமான நிலையத்திற்கு கத்தார் மருத்துவ உதவி விமானத்தில் மூலம் வந்த இராணுவ தொழில்நுட்பக் குழுவை இத்தாலிய வெளியுறவுதுறை அமைச்சர் லூய்கி டி மாயோ மற்றும் இத்தாலிய குடியரசின் கத்தார் மாநில தூதர் அப்துல்அஜிஸ் பின் அகமது அல் மல்கி அல் ஜெஹ்னி ஆகியோர் மருத்துவக்குழுவை வரவேற்றனர்.