HMC இன் பல் சம்மந்தப்பட்ட‌ சேவைகள் அவசர சிகிச்சைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.!

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுவதற்கான அபாயத்தைக் குறைப்பதற்கான பொது சுகாதார அமைச்சகத்தின் (MoPH) உத்தரவுக்கு இணங்க, அனைத்து வழக்கமான நியமனங்களும் ஹமாத் பல் மையத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொற்றுநோயின் இந்த காலகட்டத்தில் அவசர சிகிச்சைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கிளினிக்கிற்கு செல்வதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவை உங்களிடம் காணப்படல் வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

  • கடுமையான பல் வலி (திடீரெனத் தோன்றும் வலி அல்ல)
  • உங்கள் ஈறுகள், முகம் அல்லது கழுத்தில் வீக்கம்
  • உங்கள் வாயில் நிற்காமல் செல்லும் இரத்தப்போக்கு
  • தொற்று அல்லது அதற்கு கணிசமான ஆபத்து
  • அடியினால் உண்டாகும் காயம் (உடைந்த பல் போன்றவை)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் உங்களுக்கு பொருந்தினால், பல் மருத்துவரிடம் சந்திப்பை ஏற்பாடு செய்ய 16000ஐ அழைக்கலாம்‌ என்றும்,
கிளினிக்கிற்கு செல்வற்கு முன்பு உங்களுடைய உடல்நிலை சரியில்லை எனில் (காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் மற்றும் தொண்டை புண் போன்ற சுவாச நோய்களின் அறிகுறிகள் இருந்தால்) நீங்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனைக்கு முதலில் 16000 இல் COVID-19 ஹாட்லைனை அழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.