லெபனான் வெடி விபத்து; கத்தார் அவசர மருத்துவ உதவிகளை அனுப்பி வைத்தது.! 

Pic: Qatar Day

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் உத்தரவின் பேரில், கத்தார் இன்று (05-08-2020) காலை லெபனான் நாட்டிற்கு அவசர மருத்துவ உதவிகளை அனுப்பி வைத்தது.

பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான மருத்துவ பொருட்களை ஏற்றிக்கொண்டு, அமிரி விமானப்படையின் முதல் விமானம்  லெபனான் நாட்டில் உள்ள Rafic Hariri சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டது.

இதையும் படிங்க: கத்தாரில், வேக வரம்பில் மாற்றம் குறித்த செய்தி தவறானவை; போக்குவரத்து துறை விளக்கம்.!

லெபனான் நாட்டிற்கு தொடர்ச்சியாக மேலும் மூன்று விமானங்கள் மருத்துவ உதவிகளை ஏற்றிக்கொண்டு இன்று புறப்படும். இந்த மருத்துவ உதவியில், 500 படுக்கைகள் கொண்ட இரண்டு கள மருத்துவமனைகள் உள்ளதாகவும், ஒவ்வொன்றிலும் சுவாசக் கருவிகள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..

?Facebook
https://www.facebook.com/tamilmicsetqatar/

? Twitter
https://twitter.com/qatartms

? Sharechat
https://b.sharechat.com/GgWjwcpyi5

? Telegram https://t.me/tamilmicsetqatar