கத்தார், இந்தியா இடையே வர்த்தகம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்; இந்திய தூதர்.!

Qatar India trade volume
Pic: Gulf-Times

கத்தார் மற்றும் இந்தியா இடையே வர்த்தக அளவு இந்த ஆண்டு இடைப்பகுதியில் COVID-19க்கு முந்தைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக கத்தார் இந்திய தூதர் Dr.தீபக் மிட்டல் தெரிவித்துள்ளார்.

கத்தார் மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு வர்த்தகம் கடந்த 2019ம் ஆண்டில் 11 பில்லியன் டாலர்களைக் கடந்தது என்றும், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை COVID-19 காலகட்டத்திலும் இருதரப்பு வர்த்தக அளவு சுமார் 7 பில்லியன் டாலராக இருந்தது நல்ல வளர்ச்சி என Dr.தீபக் மிட்டல் கூறியுள்ளார்.

இந்திய நாட்டின் 72வது குடியரசு தின விழா: கத்தார் அமீர் உள்ளிட்டோர் வாழ்த்து.!

மேலும், இரு நாடுகளுக்கிடையில் வர்த்தகம் செய்யப்படும் பொருட்களான மின்சார உபகரணங்கள், உணவுகள், பானங்கள், ரசாயனங்கள், ஜவுளிகள், மருந்துகள், கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றை பரிமாறிக்கொள்கிறோம் என்றும், கத்தார் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் முதல் மூன்று இடங்களில் இந்தியாவும் உள்ளது என்றும் கத்தார் இந்திய தூதர் தெரிவித்தார்.

இந்திய வர்த்தக ஊக்குவிப்பு கவுன்சில் (TPCI) திட்டம் குறித்த கேள்விக்கு, கத்தாரில் இந்திய தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்காக தொடர்ந்து விளம்பர நிகழ்ச்சிகள் நடத்துவதில் கவுன்சில் ஈடுபட்டுள்ளது என கத்தார் இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் குறித்து WOQOD விளக்கம்.!