கத்தாரில் கோலாகலமாக தொடங்கிய பேரீச்சம் பழம் விழா..!

Pic: Twitter/QNA

கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஐந்தாவது “உள்ளூர் பேரீச்சம் பழம்” விழாவை அல் மீரா நுகர்வோர் பொருட்கள் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் அல் மீராவின் Hayat Plaza கிளையில் நேற்று (20-07-2020) முதல் துவங்கியுள்ளது.

Pic: Twitter/MME

இந்த விழாவானது, அமைச்சகத்தின் வேளாண்மை மற்றும் மீன்வள விவகாரத் துறைகளின் உயர் மட்ட அதிகாரிகள் மற்றும் அல் மீரா முன்னிலையில் தொங்கியது.

பொதுவாக இந்த விழா Souq Waqif-ல் நடைபெறும் ஆனால், இந்த வருடம் அல் மீரா கத்தார் முழுவதும் உள்ள 54 இடங்களில் அதன் கிளைகளில் விழாவை நடத்த பொறுப்பேற்றுள்ளது.

Pic: Twitter/MME

மேலும், இந்த விழாவானது 300 டன் உள்ளூர் பேரீச்சம் பழங்கள் இருப்பு வரை
வரை தொடரும் என்றும், இந்த ஆண்டு  100க்கும் மேற்பட்ட உள்ளூர் பண்ணைகள் மற்றும் பேரீச்சம் பழங்கள் தயாரிப்பாளர்களின் பங்கேற்பைக் காண்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

Pic: Twitter/MME