கத்தாரில் கோலாகலமாக தொடங்கிய 5வது அறுவடை திருவிழா.!

qatar Mahaseel Festival begins
Pic: The Peninsula

கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் வருடாந்திர Mahaseel (அறுவடை) விழாவின் ஐந்தாம் பதிப்பு நேற்று (23-12-2020) புதன்கிழமை தொடங்கியுள்ளது.

இந்த அறுவடை விழாவை ஜனவரி 2ம் தேதி வரை நடத்த கலாச்சார கிராம அறக்கட்டளை (Katara) ஏற்பாடு செய்துள்ளது.

கத்தார் WOQOD புதிய பெட்ரோல் நிலையத்தை திறந்துள்ளது.!

இந்த விழாவில், கத்தார் பண்ணைகளின் உரிமையாளர்கள், தேசிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

மெக்ஸிகோ மக்களுக்கு உதவிகள் வழங்கிய கத்தார் தூதரகம்.!

ஒவ்வொரு ஆண்டும் கத்தார் விவசாயத் துறை, தேசிய கால்நடை மற்றும் உணவுப் பொருட்களை ஆதரிப்பதற்கும் மற்றும் கத்தார் பண்ணைகளின் உரிமையாளர்களுக்கு வணிக வாய்ப்புகளை வழங்குவதற்கும் (katara) இந்த விழாவை ஏற்பாடு செய்கின்றது.

இந்த விழாவில் சுமார் 28 கத்தார் பண்ணைகள், இறைச்சி, முட்டை, கோழி, பால் மற்றும் அதன் வழித்தோன்றல்களின் உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்ற 9 தேசிய நிறுவனங்கள் மற்றும் மலர், ரோஜாக்கள் மற்றும் அலங்காரம் போன்ற தாவர துறையின் 8 நர்சரிகள் உள்ளிட்ட 45 ஸ்டால்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த mahaseel (அறுவடை) விழா உள்ளூர் பண்ணைகள் தங்களுடைய விளைபொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துவதற்கும், உள்ளூரில் வளர்க்கப்படும் பலவிதமான பழங்கள் மற்றும் காய்கறிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும் சிறந்த தளத்தை வழங்குகிறது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Telegram