கொரோனா வைரஸ்; கத்தாரில் நடைபெற இருந்த DIMDEX கண்காட்சி ரத்து..!

Qatar maritime defence exhibition DIMDEX 2020 cancelled.

கத்தார் தோஹாவில் இந்த மாதம் நடைபெற இருந்த தோஹா சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாடு (DIMDEX 2020) ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த டிம்டெக்ஸ் கண்காட்சியானது, மார்ச் 16 ஆம் தேதி முதல் 18 வரை தோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற திட்டமிட்டிருந்தது.

ஆனால், உலகளாவிய கொரோனா வைரஸ் தாக்கத்தினால், DIMDEX கண்காட்சி குறித்து, பொது சுகாதார அதிகாரிகள், அரசாங்கத்துடன் கலந்து ஆலோசனை செய்த பின்னர், இது ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.