கத்தார் அனுப்பிய மருத்துவ உதவிகள் இத்தாலிக்கு வழங்கப்பட்டது.!

Qatar medical aid shipment delivered to Italy.

கத்தார் அமீர் H H ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்கள் உத்தரவின் பேரில், கத்தார் அமிரி விமானப்படை தனது இரண்டு இராணுவ விமானங்கள் மூலம் இரண்டு கள மருத்துவமனைகளை ஏற்றிக்கொண்டு, திங்கள்கிழமை இத்தாலிய குடியரசிற்கு வந்தடைந்தது. கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்வதற்கும், அதனை கட்டுப்படுத்துவதற்கும் இத்தாலிய நண்பர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

அமிரி விமானப்படையின் விமானப் போக்குவரத்து விமானங்களின் ஒத்துழைப்புடன், ஏற்கனவே வழங்கப்பட்ட 29 டன் மருத்துவ உதவியானது மேலும் 12 விமானங்களில் 260 டன் எடையுள்ள மருத்துவ உதவிகளை வழங்குவதற்கான ஒரு பகுதியாகும் என்று கத்தார் அபிவிருத்திக்கான நிதி (Qatar Fund for Development) தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நெருக்கடியை சமாளிக்க கத்தார் தன் முயற்சிகளின் மூலம் சகோதரதத்துவம் மற்றும் நட்பு நாடுகளுக்கு அதன் ஆதரவாக மருத்துவ உதவிகளை செய்து வருகிறது. இந்த தொற்றுநோயானது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால், அதனை எதிர்த்து போராட கத்தார் இத்தகைய உதவிகளை மேற்கொண்டுள்ளது.

கத்தார் ஏற்கனவே அனுப்பிய முதல் கள மருத்துவமனையின் பரப்பளவு சுமார் 5,200 சதுர மீட்டர் என்றும், இரண்டாவது மருத்துவமனையின் பரப்பளவு சுமார் 4,000 சதுர மீட்டர் என்றும் மேலும், இந்த இரண்டு மருத்துவமனைகளும் 1,000 படுக்கைகள் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : TPQ