கத்தாரில் இந்த வார இறுதியில் மிகவும் சூடான வெப்பநிலை நிலவும்.!

Hot daytime and humid nights during weekend
Image Credits: The Peninsula Qatar

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) இந்த வார இறுதியில் அதன் முன்னறிவிப்பில், பகல் நேரங்களில் சில மேகங்களுடன் மிகவும் சூடான வெப்பநிலை நிலவும் என கணித்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும் என தெரிவித்துள்ளது.

கத்தார் வானிலை ஆய்வுத்துறை வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் அதிகாலையில்  மூடுபனி ஏற்படும் என்றும் ட்வீட் செய்துள்ளது.

இந்த வெப்பமான காலநிலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கத்தார் வானிலை ஆய்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், குழந்தைகளை வாகனத்தில் கவனிக்காமல் விட்டுச் செல்லக்கூடாது என பெற்றோருக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. வெளிப்புற தொழிலாளர்கள் நிழலில் ஓய்வு எடுக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

 

Source: The Peninsula Qatar