கத்தாரில் எதிர்வரும் நாட்களில் தூசி காற்றுடன் கூடிய வெப்பநிலை நிலவும்.!

Image Credits: The Peninsula Qatar

கத்தார் வானிலை ஆய்வுத்துறை (QMD) இந்த வார இறுதியில் அதன் முன்னறிவிப்பில், சில இடங்களில் பனிமூட்டமான வானிலை நிலவும் என்றும், லேசான தூசி காற்றுடன் கூடிய வெப்பநிலை இருக்கும் என்றும், பகல் நேரங்களில் மேகமூட்டமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.

மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறை 32 டிகிரி செல்சியஸ் முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடும் என தெரிவித்துள்ளது.

கத்தாரில் இன்றைய நிலவரப்படி (ஜூலை 17), காற்று 5 கிலோமீட்டருக்கு குறைவான வேகத்தில் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் இது 5 முதல் 15 கிலோமீட்டர் வரை வடமேற்கு திசையில் இருந்து வடகிழக்கு திசையை நோக்கி மாறும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வெப்பமான காலநிலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கத்தார் வானிலை ஆய்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், குழந்தைகளை வாகனத்தில் கவனிக்காமல் விட்டுச் செல்லக்கூடாது என பெற்றோருக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. வெளிப்புற தொழிலாளர்கள் நிழலில் ஓய்வு எடுக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

Source: The Peninsula Qatar