கத்தாரில், வேலை நேரத்தை மீறிய புத்தகக் கடையை அமைச்சகம் 15 நாட்களுக்கு மூடியது.!

Ministry of Commerce and Industry building.

கத்தார் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் (MoCI), Al-Rayyan Al-Jadeed
தெருவில் உள்ள Jarir புத்தகக் கடையை 15 நாட்களுக்கு மூடியுள்ளதாக தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அமைச்சகம் அறிவித்திருந்த கடைகளின் நேரத்தை மீறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.