கத்தார் தேசிய தினம்: வான வேடிக்கைகளை நீங்கள் எங்கு சென்று காணலாம்.?

Qatar National Day Fireworks
Credit: qatar.qa

கத்தார் நாட்டில் நாளை மறுநாள் டிசம்பர் 18ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தேசிய தினம் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கின்றது.

இதனை முன்னிட்டு, கத்தார் தலைநகர் தோஹாவில் அமைந்துள்ள கார்னிச் (Corniche) பகுதியில் வருகின்ற டிசம்பர் 18ம் தேதி தேசிய தினத்தன்று இரவு 8:30 மணிக்கு வானவேடிக்கை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கத்தாரில் கைதிகள் தயாரித்த பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.!

தேசிய தின நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கான பாதுகாப்புக் குழு நேற்று (15-12-2020) செய்தியாளர் சந்திப்பில் கத்தார் தேசிய  தின நிகழ்வுகளுக்கான நிறுவன நடைமுறைகளை விளக்கியுள்ளது.

நுழைவு நடைமுறைகளில் தேவையான உடல் வெப்பநிலையை சரிபார்ப்பு, முகக்கவசம் அணிவது மற்றும் Ehteraz செயலியில் பச்சை நிற குறியீடு சரிபார்ப்பு போன்ற சுகாதார நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும்.

இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பில் சுகாதாரத் துறையின் குடும்பங்கள் மற்றும் பங்கேற்கும் அமைப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என துறை இயக்குநரும், பாதுகாப்புக் குழுவின் தலைவருமான Brig. Ali Khejaim Al-Athbi தெரிவித்துள்ளார்.

கத்தார் தேசிய தின அணிவகுப்பில் இவர்களுக்கு மட்டுமே அனுமதி.!

கத்தார் தேசிய தின அணிவகுப்புக்காக காலை நேரத்தில் corniche சாலை மூடப்படும் என்றும், அங்கீகரிக்கப்படாத நபர்கள் நிகழ்வு பகுதிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…