கத்தாரில் தேசிய விளையாட்டு தினம் இன்று சிறப்பாக கொண்டாட்டம்.!

Qatar Prime minister and ministry of interior Sheikh Khalid bin Khalifa bin Abdulaziz Al-Thani participated in National sports day. Image Source : Ministry of interior -Qatar

கத்தார் நாட்டில் ஒன்பதாவது தேசிய விளையாட்டு தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு, இன்று (11-02-2020) காலை, கத்தார் விளையாட்டு கழகத்தில் உள்ள சுஹைம் பின் ஹமத் அரங்கத்தில் கத்தார் போலீஸ் விளையாட்டுக் கூட்டமைப்பு (QPSF) சார்பில், மூத்த அதிகாரிகள் முன்னிலையில் பல விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்தது.

இதையும் படிங்க : நாட்டு மக்களுக்கு பயண ஆலோசனைகளை வழங்கிய கத்தார்..!

இந்நிகழ்ச்சியில், கத்தார் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஷேக் காலித் பின் கலிஃபா பின் அப்துல் அஜிஸ் அல்-தாணி (Sheikh Khalid bin Khalifa bin Abdulaziz Al-Thani) கலந்துக் கொண்டு, கால்பந்து விளையாட்டு போட்டியில் பங்கெடுத்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியின்‌ போது அரங்கத்தில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பல மூத்த அதிகாரிகள் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் ஊழியர்கள் பலர் கொண்டனர்.