வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் இரண்டு கூட்டங்களில் கத்தார் பங்கேற்பு.!!

Qatar participates in two GCC meetings
Pic: Shutterstock

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு ஊடகக் குழுவின் 10வது கூட்டத்தில் கத்தார் பங்கேற்றது.

இந்த கூட்டமானது வீடியோ கான்பரன்சிங் தொழில்நுட்பம் மூலம் இன்று (22-09-2020) நடைபெற்றது.

கத்தார் உள்துறை அமைச்சகத்தின் மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர் Brigadier Abdullah Khalifa Al Muftah அவர்கள் கத்தாரை பிரதிநிதித்துவப்படுத்தினார். இதில், பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பான பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கத்தாரில் வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 6 பேர் கைது‌.!

மேலும் அதேபோல், விமான நிலைய பாதுகாப்புத் துறையின் உதவி இயக்குநர் Lieutenant Colonel Saud Abdulaziz Al Musallam தலைமையிலான தூதுக்குழுவுடன், வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற GCC நாடுகளின் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் 33வது கூட்டத்தில் கத்தார் பங்கேற்றது.

இந்த கூட்டத்தில், விமான நிலைய பாதுகாப்பு “electronic single window” திட்டம் மற்றும் GCC நாடுகளில் விமான நிலைய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கத்தாரில் COVID-19 வழிகாட்டுதல்களை மீறிய உணவகத்தை அமைச்சகம் மூடியது.!!

கத்தார் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…