கத்தார் பெட்ரோலியம்; மார்ச் மாத எரிபொருள் விலைகள் அறிவிப்பு.!

கத்தார் பெட்ரோலியம் (QP) 2020 மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலைகளை அறிவித்துள்ளது.

முன்னதாக, பிப்ரவரி மாதத்தில், கத்தார் பெட்ரோலியம் (QP) டீசலின் விலையில் ஐந்து திர்ஹம்களை அதிகரித்திருந்தது. சூப்பர் பெட்ரோலின் விலையில் ஐந்து திர்ஹம்களை குறைத்தும், பிரீமியம் பெட்ரோல் விலையில் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் அறிவித்திருந்தது.

புதிய விலைப் பட்டியலின்படி, மார்ச் 01 முதல் பிரீமியம் பெட்ரோல், லிட்டருக்கு 1.60 ரியால்களாக விற்பனையாகும். இது பிப்ரவரி 2020 மாதத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 15 திர்ஹம்கள் குறைவானதாகும்.

மேலும், சூப்பர் பெட்ரோல் மார்ச் மாதத்தில் ஒரு லிட்டருக்கு 1.65 ரியால்களுக்கு விற்பனையாகும். இது தற்போதைய விலையில் இருந்து 20 திர்ஹம்கள் குறைந்து உள்ளது.

டீசல் விலையை பொருத்தவரை, மார்ச் 01 முதல் ஒரு லிட்டர் டீசல் 1.70 ரியால்களுக்கு விற்பனையாகும். இது பிப்ரவரி மாதத்தில் விற்ற டீசல் விலையை விட 20 திர்ஹம்கள் குறைவாகும்.