கத்தார் அரசின்‌ பிப்ரவரி மாத எரிபொருள்கள் விலை..!

Qatar Petroleum announces fuel prices for February 2020.

கத்தார் அரசு 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாததிற்கான எரிபொருள் விலைகள் நேற்று (31-01-2020) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கத்தார் பெட்ரோலியம் அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், ஜனவரி மாதத்தில் 1.75 ரியால்கள் விற்கப்பட்டு வந்த பிரீமியம் பெட்ரோல் (premium petrol) விலையிலும், 1.85 ரியால்கள் விற்கப்பட்டு வந்த சூப்பர் பெட்ரோல் (super petrol) விலையிலும் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால், 1.85 விற்கப்பட்டு வந்த டீசல் விலை 5 திர்ஹம் அதிகரித்து 1.90 ரியால்களாக விற்பனை செய்யப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி, அறிவித்தலை கத்தார் எரிசக்தி அமைச்சகம் உத்தியோக பூர்வ இணையத்திலும், சமூக வளைதளங்கள் மூலமாகவும் வெளியிட்டுள்ளது.