கத்தார் பெட்ரோலியம் ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலைகள் அறிவிப்பு.!

temporarily close petrol station
Pic: Qatar Living

கத்தார் பெட்ரோலியம் ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலைகளை இன்று (30-06-2020) அறிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட ஜூலை மாதத்தில்  பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளன.

புதிய விலைப்பட்டியலின் படி, ஜூலை 01 முதல் பிரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு QR. 1.10 ரியால்களுக்கு விற்பனையாகும்.
இது ஜூன் மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட 10 திர்ஹம்கள் அதிகமாகும். மேலும், சூப்பர் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு QR 1.20 ரியால்களுக்கு விற்பனையாகும்‌. இது கடந்த மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட 15 திர்ஹம்கள் அதிகமாகும்.

அத்துடன், ஒரு லிட்டர் டீசல் QR 1.10  ரியால்களுக்கு விற்பனையாகும். இது ஜூன் மாதத்தில் விற்கப்பட்டு வந்த விலையை விட 5 திர்ஹம்கள் அதிகமானதாகும்.

Pic: Twitter/WOQOD

எரிபொருள் விலைகள் ஜூன் மாதத்தில் மாற்றப்படவில்லை என்ற போதிலும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கணிசமாகக் குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.