உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கத்தார் முதல் இடம்..!

Pic: Expedia

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை உலகத்தின் மிகப்பெரிய இணைய தரவுத்தளமான நும்பியோ (Numbeo) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கத்தார் நாட்டிற்கு முதல் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டின் மத்தியில் உலகம்
முழுவதும் உள்ள நாடுகளின் குற்ற
குறியீட்டின் (Crime Index) அடிப்படையில்
நடத்தப்பட்ட ஆய்வின் மூலமாக நாடுகளை
நும்பியோ வரிசைப்படுத்தியிருக்கிறது.

இதில், கத்தார் பாதுகாப்பு குறியீட்டில்
(Safety Index) 88.10 புள்ளிகளுடனும்,
குற்ற குறியீட்டில் (Crime Index) 11.90 மதிப்பும் பெற்று பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Pic: The Peninsula

நகரம் அல்லது நாட்டில் நடைபெற்ற குற்ற சம்பவங்களின் அடிப்படையில் இந்த குற்ற குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது. குற்ற சம்பவங்கள் 20க்கு குறைவாக இருந்தால் அதனை மிகக்குறைவு எனவும், குற்ற
சம்பவங்கள் 20 – 40க்குள் இருந்தால் குறைவு எனவும் 40 – 60க்குள்
இருந்தால் மிதமான எனவும் 60 – 80க்குள் இருந்தால் அதிகம் எனவும் 80ஐ
கடந்தால் மிக அதிகம் எனவும் வரையறை செய்யப்படுகின்றன என்று நும்பியோ
நிறுவனம் தெரிவித்துள்ளது.

குற்ற குறியீடுக்கு நேர்மாறானது
பாதுகாப்பு குறியீடு. ஒரு நகரம்
அதிகமான பாதுகாப்பு குறியீட்டை
பெற்றிருந்தால் அந்நகரம் பாதுகாப்பான
நாடாக கருதப்படும் என்று நும்பியோ
தெரிவித்துள்ளது.

மேலும், பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள தைவான் 84.74 பாதுகாப்பு குறியீட்டுகளையும், மூன்றாம் இடத்தில் உள்ள அமீரகம் 84.55 புள்ளிகளையும் பெற்றுள்ளன.