கத்தார் ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்த ஆர்வம்.!

2030 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்த கத்தார் மற்றும் சவுதி அரேபியா நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளது.

சீனாவில் வரும் 2022 ஆம் ஆண்டில், 19வது ஆசிய விளையாட்டு போட்டி நடக்கவுள்ளது. அடுத்து, 2026 ஆம் ஆண்டு  ஜப்பானில் நடைபெறும். இதனிடையே 2030ல் 21வது ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்த கத்தார் மற்றும் சவுதி அரேபியா உரிமை கோரியுள்ளது.

கத்தாரில் கடந்த 2006ல் ஏற்கனவே ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்துள்ளது. மேலும், இங்கு 2022 ஆம் ஆண்டில், FIFA உலக கோப்பை கால்பந்து தொடரும் நடக்கவுள்ளது. தற்போது ஆசிய விளையாட்டு போட்டிகளை நடத்தவும் கத்தார் முயற்சிக்கிறது. சவுதி அரேபியாவை பொறுத்தவரையில் இதுவரை எவ்வித சர்வதேச தொடர்களும் நடத்தியது கிடையாது.

மேலும் இதுகுறித்து, 45 நாடுகள் உறுப்பினராக உள்ள ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ஷேக் அகமது அல் பகாத் அல் சபா கூறுகையில், 2030 ஆசிய விளையாட்டு போட்டியை நடத்த இரு வலிமையான நாடுகள் முன்வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

Source : Dinamalar