COVID-19; கத்தார் இதுவரை 22க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது.!

Pic: Twitter/QNA

கத்தார் அமீர் HH ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் உத்தரவை செயல்படுத்தும் விதமாகவும், கொரோனா வைரஸ் (COVID-19) பரவலை சமாளிக்க நட்பு நாடான பெலாரஸ் குடியரசின் முயற்சிகளுக்கு ஆதரவாகவும், அவசர மருத்துவ உதவிகளை நேற்று (25-06-2020) பெலாரஸ் நாட்டிற்கு கத்தார் மாநிலத்தின் கத்தார் அபிவிருத்திக்கான நிதியம் (QFFD) மூலம் வழங்கியுள்ளது.

கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் மூலம் வழங்கப்பட்ட இந்த அவசர மருத்துவ உதவிகள் 7 டன் எடை கொண்டுள்ளதாகவும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் உள்ளன என்றும் QFFD அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில், QFFD இன் இயக்குநர்
ஜெனரல் Khalifa bin Jassim Al Kuwari கூறுகையில், இந்த மருத்துவ உதவி தொற்றுநோய் பரவுவதை எதிர்த்து கத்தார் அரசு மேற்கொண்ட பெரும் முயற்சிகளை பிரதிபலிக்கிறது என்றார்.

மேலும், தொற்றுநோய் வெடித்ததில் இருந்து இதுவரை கத்தார் மாநிலத்தின் QFFD மூலம் 22க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அவசர மருத்துவ உதவிகள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.