கத்தார் நான்கு நாடுகளுக்கு அவசர மருத்துவ உதவியை அனுப்பியுள்ளது.!

Image Credits: The Peninsula Qatar

கத்தார் அபிவிருத்திக்கான நிதியம் (QFFD) கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதை கட்டுப்படுத்த நான்கு நாடுகளுக்கு அவசர மருத்துவ உதவியை வழங்கியுள்ளது.

கத்தார் அபிவிருத்திக்கான நிதியம் ஆப்கானிஸ்தான், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, செர்பியா மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நான்கு நாடுகளுக்கு 34 டன் எடையுள்ள அவசர மருத்துவ உதவிகளை அனுப்பியுள்ளது.

COVID-19 தொற்றுநோயை எதிர்கொள்ள நட்பு அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக கத்தார் அமீர் H H ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி அவர்களின் உத்தரவின் அடிப்படையில், ஒவ்வொரு நாட்டுக்கும் தலா 8.5 டன் எடையுள்ள அவசர மருத்துவ உதவிகளை அனுப்பியுள்ளது.

இந்த மருத்துவ உதவிகள் ஆப்கானிஸ்தான், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா மற்றும் வடக்கு மாசிடோனியாவை அடைந்தது என்பதை QFFD உறுதிப்படுத்தியது.

Source: The Peninsula Qatar