காசாவில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு கத்தார் மானியம் வழங்கவுள்ளது.!

Pic: Twitter/Qatar News Agency

கத்தார் அபிவிருத்திக்கான நிதியுதவியுடன் ஒத்துழைக்கும் குழு, அடுத்த வாரம் தொடக்கத்தில் காசாவில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு ரொக்க மானியத்தை வழங்கத் தொடங்கும் என கத்தாரின் காசா புனரமைப்புக் குழுவின் தலைவர் H E Ambassador Mohammed Al Emadi நேற்று (27-06-2020) வலியுறுத்தினார்.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் காசாவில் உள்ள தபால் நிலையங்கள் மூலம் தலா 100 டாலர்கள் வீதம் பெறுவார்கள் என H E Ambassador Al Emadi கூறியுள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் (COVID-19) பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பயனாளிகள் பாதுகாப்புத் தரங்களைப் பின்பற்றுவதையும், ஒருவருக்கொருவர் இடையில் போதுமான தூரத்தை வைத்திருப்பதையும் உறுதிசெய்து, நியமிக்கப்பட்ட அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த மானியம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Source: The Peninsula Qatar